தெரிந்ததும் தெரியாததும்...

கண்ணெதிரே நிற்பவர்
யாரென்று தெரியும்
உண்மையில் அவர்
யாரென்று தெரியாது...

கேள்விகளுக்கு பதில்கள்தான்
சரியென்று தெரியும்
கேள்விகளுக்கு சரியான
பதில்கள் தெரியாது...

தெரிந்தவையெல்லாம் தெரியாமலும்
தெரியாததெல்லாம் தெரிந்தும்
போகலாம்...என்றாவதொருநாள்!
உண்மை யாதெனில்
உலக வாழ்க்கை ஒரு
பிரமை!!!

எழுதியவர் : அக்னிபுத்ரன் (9-Dec-11, 4:40 am)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 289

மேலே