கிறுக்கல்கள்...

தான் வரைந்த கோடுகளை
சில நொடிகள் உற்றுப் பார்த்துவிட்டு
அழித்துவிட்டுச் சென்றது
குழந்தை...
அரைகுறையாக அழிக்கப்பட்டதில்
ஓவியங்களாகிப்போயின
கிறுக்கல்கள்...

எழுதியவர் : அக்னிபுத்ரன் (9-Dec-11, 4:33 am)
சேர்த்தது : Agniputhran
Tanglish : kirukkalkal
பார்வை : 242

மேலே