பள்ளி செல்லும் அல்லி ராணி....
அதிகாலை, அல்லோலப்பட்டுக் கொண்டிருகிறது
அமைதியான வீடு.
அல்லி ராணியை அள்ளி எடுத்தார்
அப்பா, படுக்கையிலிருந்து.
பிஞ்சு மொட்டு கண் மலர மறுக்கிறது.
கசக்கி, கசக்கி முத்தம் கொடுக்கிறார்,
கண்ணத்தில். குட்டியோ பட்டு கைகளால்
கழுத்தை தட்டி விடுகிறது.
பிறகு வாய் திறந்து அம்மா ராகம்
பாடியது.
கண்ணுகுட்டியை கையில் வாங்கி,
மடியிலிட்டு, தலை கோதி கொஞ்சுகிறாள், அம்மா.
அப்பா தனிமரமாய், நாளிதழ் நாடி,
நாற்காலி அடைகிறார்.
சர்க்கரை இட்ட, சுவையான பசும்பாலை,
பாட்டில் கொண்டு, வாயிலிடுகிறாள்.
வாஞ்சையோடு வாங்கிகொள்கிறாள்,
இந்த குட்டி வானம்பாடி.
குளியலறை கூட்டிச்சென்று, சுடு நீரில்
உடல் நனைத்து, சோப்பிட்டு, குளிக்க
வைத்தாள் குண்டு குங்கும சிமிழை.
துண்டு கிடைக்க நேரமானதால்,
துள்ளி குதித்தால் புள்ளி மான்போல.
கிடைத்த துணியால், உடல் போர்த்தியவுடன்,
தோகை மயில் போல் சிலிரித்து சிணுங்கினாள்.
நடக்க வைத்து படுக்கையறை அடைந்து,
மடியிலிட்டு, அப்பா கையில் வைத்துள்ள
பிட்டு துணியால், காது, மூக்கு சுத்தம் செய்தாள்.
இதை ஏற்க மனமின்றி இளந்தளிர் தும்மிவிட்டாள்.
உடல் முழுவதும் பவுடர் இட்டு, புருவத்திலும்,
விழி ஓரத்திலும் மையிட்டு, நெற்றியில் பொட்டிட்டால்.
மின்விசிறியை பார்த்துக்கொண்டே சகித்துகொண்டாள்
1550 ஆம் முறை.
பிறகு காலர் நுணியில் சந்தன பொட்டிட்ட
சட்டையும், அதன் மேல் கச்சா வைத்த
கௌன்னும் அனுவிக்கப்பட்டது.
கழுத்தில் டை ஒன்றும், இடுப்பில்
எலாஸ்டிக் பெல்ட் ஒன்றும் மாட்டியதை,
புரியாமல் வெறித்து பார்த்தது வெள்ளந்தி.
டைன்னிங் டேபிள் மேல் அமர்த்தி,
சுட்டு வைத்த இட்லியை, வாயில்
நுழைத்து பார்த்தால், உடனே தரையை
பார்த்து துப்பினாள்.
பல்லை கடித்துக்கொண்டே, பாலை கொடுத்தாள்.
ஓரிரு துளிகள் தவிர உள்வாங்க மறுத்தால்.
முறைத்துக்கொண்டே வெட்டி வைத்த ஆப்பிள்
துண்டை துணித்தால், துப்ப முடியாமல், விழுங்க
நினைத்து விக்கி, விக்கி விம்மினாள்.
துடித்து போய், தலை தடவினார் தாத்தா,
பாதம் பிடித்தால் பாட்டி,
துப்பவைத்தால் அம்மா,
இதை தள்ளி நின்றே பார்த்தார் அப்பா.
சரியான பின்பு, மகளை அருகில்
கொண்டு ஆசுவாசப்படுத்தி,
வெறி கொண்ட வேங்கை போல்
கடித்து கொதரினார் மனைவியை.
அலடிக்கொள்லாமல் அடுத்த வேலையை
தொடர்ந்தாள் மனைவி, எப்போதும்போல்.
கணுக்காலை சூவில் சொருகி, சுருக்கு
கயிறு கொண்டு இருக்க வைத்தாள்,
மழலையோ மதிகெட்டு சிரித்தது.
காரில் மூவரும் ஏறினர், தாத்தா, பாட்டி
முத்தங்க்கொடுத்து வழியனுப்பினர்.
கார் நகரும் போது, புரிந்துவிட்டது
குழந்தைக்கு பள்ளி செல்கிறாள் என்று,
முதல் முறை, புது அனுபவம்.
அம்மா சொல்லியிருக்கிறாள்,
ஆறு மணிநேரம், ஒரே இருகையில்
இருக்க வேண்டுமாம்!
எப்படி முடியும்?
இதுவரை இரண்டு நிமிடங்கள் கூட
இருந்ததில்லையே.
சத்தமிட கூடாதாம், மீறினால்
அடிபார்களாம், அடங்கவில்லை
என்றாள், போலீசுடம் தருவிப்பார்கலாம்.
நேற்று வரை நினைத்த நேரத்தில்
அப்பாவை பார்க்க முடியாது.
ஆனால் இன்று முதல் அம்மாவையும்
பார்க்க முடியாதாம்.
பசித்தால் அழக்கூடாதாம்,
மணியடிக்கும் வரை பொறுத்துக்கொள்ள
வேண்டுமாம்.
இதை என் குட்டி வயிரிடம்
எப்படி சொல்வேன்?
ஒன்னுக்கு வந்தால் கூட ஒடக்கூடாதாம்,
டீச்சரிடம் சொல்லவேண்டுமாம்.
அனுமதித்தால் தப்பித்தேன்,
இல்லையேல் அசிங்க படுவேனே
அனைவரின் முன்னிலையிலும்.
ஒழுங்காய் இருக்க வேண்டுமாம்.
ஒழுங்கை பற்றி ஒரு நாள்,
அப்பா சொன்னார் லேப்டாப்பை
தட்டிக்கொண்டே, ஒன்றும் புரியவில்லை.
இதில் ஏதேனும் தவறினாள்,
அடிப்பார்களாம், முட்டியிட சொல்ல்வார்கலாம்,
அதோடு திட்டுவார்களாம், இன்னும் என்னென்னவோ.
பள்ளி வந்துவிட்டது இறங்கு என்றாள்,
என் அம்மா.
மனமின்றி நடக்க மறுத்தேன்,
தூக்கி கொண்டார் என் அப்பா.
அம்மாவோ என் தலையை தடவிக்கொண்டே
பின் தொடர்ந்தாள்.
அடிக்கொரு முறை முத்தம் தந்து
கொண்டே நடந்தார் அப்பா.
இப்போது அம்மாவோ கண்ணத்தை
கிள்ளி, கிள்ளி சிரிக்கிறாள். எனக்கோ
வெறுப்பு தான் வந்தது.
வகுப்பறை வந்து இறக்கி விட்டு,
அமர வைத்து, டாட்டா சொல்லி,
வெளியே சென்றனர்.
எனக்கு பயம் தொற்றி,
நடுக்கம் கண்டது.
ஜன்னல் பக்கத்தில்
சிரித்துக்கொண்டே அம்மா,
மனதுக்குள் அழுதுகொண்டே அப்பா.
டீச்சர் உள்ளே வந்தாள்,
நான் 'வேய்' என்று,
உதடு பிதுக்கி,
வாய் பிழந்து
அழ ஆரம்பித்தேன்.................