காதல் வந்தால் சொல்லி அனுப்பு வருவேன் 555
பெண்ணே...
அன்று நீயும் நானும்
மழையில் நனைந்துகொண்டு
வானவில்லை ரசித்தோம்...
இன்று நான் மட்டும் மழையில்
நனைந்துகொண்டு ...
வானவில்லை ரசிபதற்காக அல்ல .....
மழை நீரோடு கலக்கும் என் கண்ணீர்
துளி கள் நதியோடு கலந்தது
சமுத்திரத்தில் கலக்கும் என்ற
நம்பிக்கையில் ....
நாளை நீ சமுத்திரத்தில் கால் நனைக்க
வருவாய் என்ற நம்பிக்கையில் .....
என் கண்ணீர் துளிகள்
உன் பாதங்களை முத்தமிடும் என்பதால்....