கல்லூரி கவிதை...

பல்கலைகழகத்தின் ஓர் அங்கமாய் ,
வெள்ளை நிற கட்டிடமாய்,
உயர்ந்து நிற்கிறது எங்கள் கணினி துறை ..
" Basic Science Block "
எங்களை கணினி துறை
மாணவர்கள் என பறைசாற்றி,
கணிப்பொறிகளை சுமந்து கொண்டு
பத்திரமாய் எழுந்து
நிற்கிறது!...

முதுகலை பயிலும்
முப்பதினாங்கு (42 ) மாணவர்கள்
கட்டிடங்களின் துகள்களுக்குள்
உயிரோடி நட்பென உறவாடி
உயிர் வளர்த்தனர்!...

நட்பென்ற சொல்லுக்குள் கட்டுண்டு நகமும்,
சதையும் என நவிழ்ந்து நேசம்
வளர்க்கிறார்கள்,
வானில் களைந்து போகும்
மேகங்களென நம் மூன்றாண்டு
கல்லூரி பயணம்,

அப்பயணத்தில் பாடங்களை
கற்கிறோமோ இல்லையோ !..

பாசத்தில் கசிந்து உருகும்
நட்பினை கற்று கொண்டோம்,...

உறவாடி உயிர் வளர்த்த
தோழமையை கற்று கொண்டோம்...

கணிப்பொறியினை இயக்குவதற்கு
கற்கிறோமோ இல்லையோ!...

களவாடிய நெஞ்சங்களை
நேசிக்க கற்று கொண்டோம்..!

நட்பென்ற உயிர் மூச்சினை
சுவாசிக்க கற்று கொண்டோம்..!

வாழ்க்கை பயணத்தின்
ஓர் அங்கமென நினைவுகளை
சேமித்து கொண்டோம்..!
பயணித்த பயணத்தினை
திரும்பி பார்க்கையில்
நேசித்த
சில நொடிகள் இதோ....!

நாம் தினமும் கல்லூரி வர
காத்து கிடந்தது வகுப்பறை
கட்டிடம்...!

வந்து போகும் நம் நினைவுகளை
வாழ்க்கை பதிவேட்டில் சேகரித்து
கொண்டது..!

கற்பனைகள், கனவுகளை பகிர்ந்து
கொண்டோம் நம் நட்போடு..!
அந்தரகம் அத்தனையும்
அறிந்த மகள் நட்பு மகள்
மட்டுமே..!

பகிர்ந்து உன்ன பண்டம்
கொணர்ந்து நகர்ந்து போகும் காலத்திற்கும்
நாம் கொஞ்சம் அளித்து
நினைவுகளென நிற்க
சொன்னோம்..!

நினைவுகளை நெஞ்ச கூட்டில்
பத்திரமாய் சேகரித்து
கொண்டோம்..!

தேர்வுக்கு முன் தினம்
மட்டும் தூங்கி போன
ஏட்டினை தட்டி எழுப்பி ,
ஓரிரு வார்த்தைகள் தின்று
தேர்வறையில் கொட்டினோம்..!

அர்த்தமற்ற கோபங்களில்
அழுகையை நனைத்து
நட்போடு சண்டையிட்டு அவள்
மடியில் முகம் புதைத்து அழுது
கண்ணீரில் கரைத்தோம்..!
கோபங்கள் செத்து போக..!
நேசம் மட்டும் நெஞ்சில் நின்று நிறைந்தது...!

என் உயிர் பத்தி பிடுங்கி
உரமிட்டு வளர்த்த என்
நட்பு,
பிரிவு என்னும் கட்டாய
காலத்தினில் காணாமல் போக,
அவள் திருமணத்திலும்,
என் திருமணத்திலும்,
மறைந்தே போக ,
யோசிக்கிறேன் இப்போது
பெண்ணாக ஏன்
பிறந்தேன் என்று...!

என் மனதினில் கருமை
பூசி காற்றோடு பயணிக்கும்
காலத்தினை நிறுத்தி கேட்டேன்
நான்...!
என் நட்பினை நிறம் என்ன என்று,
அது சொன்னது..
உன் நட்பின் நிறமானது "வெண்மை"
ஆம் ,,,, என் நட்பின் நிறம்
"வெண்மை"

பாசத்தில் கசிந்துருகும்
போது
பச்சை நிறமாகிறோம்..!

நேசத்தில் நெஞ்சம்
நிறைந்த நீலமாகிறோம்..!

கோபத்தில் செந்தூரம்
கலந்த சிவப்பாகிறோம் ..!

மூன்றும் உச்சத்தில் வெண்மையாகும்...!

rgb(255 ,255 ,255 ) = white ...

எழுதியவர் : கவிதா குமரன் (9-Dec-11, 9:30 pm)
Tanglish : kalluuri kavithai
பார்வை : 2057

மேலே