பாரத மாதா



உன் தலையென இருப்பது இமயம்.
தலைநகர் டெல்லி இதயம்.
தாயே நின்னைப் பாதுகாக்க
தாங்கி நிற்போம் எதையும்.

வங்க கடலில் ஒரு கை.
அரபியிலே உன் மறுகை.
முடிவே இல்லா தாயே உனக்கு
முக்கடல் நடுவே இருக்கை.

குட்டையானதும் பாதம்-எனினும்
குமரி எல்லை வரை நீளும்.
மட்டமாய் உன்னை யாரும் பழித்தால்
எட்டி மிதிக்கும் என் காலும்.

கடலென ஓடும் கங்கை.
காவிரியதற்கு தங்கை-அதை
கர்ப்பம் சுமக்கும் தாயே நீயோ
களங்கம் இல்லா மங்கை.

மனிதர்கள் வாழும் தேசம் - இங்கே
மதங்களுக்கென்ன வாசம்?
சாதியின் முதுகில் தாயே உனது
சாட்டைகள்தான் இனி பேசும்.

எழுதியவர் : sundarapandi (10-Dec-11, 10:03 am)
பார்வை : 6585

மேலே