தேவன் எத்தனை முறை வருவான்
மந்தையை மேய்த்துச் செல்வான் தேவன்
மந்தையிலிருந்து ஓரிரு கருப்பு ஆடுகள்
விலகித்தான் ஓடும்
கருப்பு ஆடுகளே மந்தைகளாகி
சாத்தானின் ஏவுதலில் போனால்
தேவன் எத்தனை முறை வருவான்
சிலுவையில் எத்தனை முறை மாண்டிடுவான்
---கவின் சாரலன்