யாரது......?
யாரது சின்ன கலவரம்
என்னில் செய்தது...?
யாரது சின்ன புன்னகையில்
நெஞ்சை தீண்டியது...?
யாரது ஒற்றை வார்த்தையில்
உள்ளம் திருடியது....?
அவன் முகம் பார்த்ததில்லை,
முகவரி கேட்டதில்லை,
என்னை கவர்ந்தது அவன் குரல்தானம்மா...
அவன் பழகும் விதம் தெரியும்,
அவன் பாசத்தின் மொழி தெரியும்,
என்னை கவர்ந்தவனின் பெயர் தெரியவில்லை....
மதம் தேவையில்லை, அவன் குலம்தேவையில்லை,
என்னை என்றும் விரும்பும் அன்பு மட்டும் போதும்...
பணம் தேவையில்லை, பதவி தேவையில்லை
என்னை மட்டும் விரும்பும் மனம் மட்டும் போதும்...
மனம் எங்கும் மெல்ல உன்னை பற்றி சொல்ல
வெள்ளையான உள்ளம் வானவிலக கண்டேன்...
பெயர் சொல்லும் போது
விருப்பத்தையும் சேர்த்து சொல்....