நிறுத்துவதற்கு நேரமில்லை...!
நிலை தடுமாறும் உலகில்
நித்தம் நிலையில்லா விலையே
அதில் சுமையாகும் மனதில்
மதி விளையாடும் விதியோ
அணையாத மொழியில் நித்தம்
அமைதியே இல்லையோ அதில்
அரசாடும் பதவியில் நல்
அடையாலம்மில்லையோ
வருவதும் போவதும் வாழ்க்கையின்
வாட்டமோ இதில்
வருந்துவதும் திருந்துவதும்
வாக்குறுதியும்மில்லையோ
இருந்தும் ஏறுவதும் இறங்குவதும்
குறையவில்லையோ மோகம்
இடைவிடாது இசைப்பதை இன்னும்
நிறுத்துவதற்கு நேரமில்லையோ