ஏன் இங்கு.......
ஏன் இங்கு படைத்தாயோ அன்பில்லா உலகிலே...
நான் உன்னை கேட்கின்றேன் விடைசொல் இறைவா...
அன்பு காட்ட தாயும் இல்லை,
அரவணைக்க தந்தை இல்லை,
அடைக்கலம் எனக்கு இல்லை,
நிலை மாறும் நிலை தோன்றுமா இறைவா...
பிச்சை காசும் எனக்கு இல்லை,
பிற தொழில் தெரியவில்லை,
என்னை நம்ப யாரும் இல்லை,
எனகென எவரும் இல்லை....
ஏன் இங்கு படைத்தாய் இறைவா...
மலர் கொண்டு பூசை செய்தேன்
மனம் நொந்து உன்னை தொழுதேன்
கண்ணீர் தவிர வேறு வரம் இல்லையோ...
கல் கொண்டு உன்னை செய்தால்
மனமும் கல்லானதோ இறைவா...
எனக்கும் கனவுகள் உண்டு
பள்ளி செல்ல ஆசை உண்டு
கனவே சொந்தம் இல்லை...
இதில் எங்கு பள்ளி செல்ல இறைவா...
பசியார உண்டதில்லை,
விளையாடி களித்ததில்லை,
மனம் விட்டு சிரித்ததில்லை,
இது என்ன விதியின் சதியா இறைவா...
எனக்கென்ன பதிலும் தருவாய்...
விடை சொல்ல விரைவில் வருவாய்...
அழைத்தது சின்ன உள்ளமே...
பதில் எனக்கு இல்லையென்றால்
ஆதரவில்லா உலகில் வாழ்த்தென்ன
நியாயமோ இறைவா...............................!