வசந்தம்தான் உனக்கு ! (நண்பரின் குடும்பத்திற்கு சமர்பணம் )

கேரள இடுக்கியில் பிறந்த நீ
மணம் முடித்த தமிழுக்கு பரிசு !

மனித நேய பயணத்தில் - இன்னும்
நல்ல மனிதரை மணமுடித்தாய் !

சின்ன குடும்பமாய் சிங்காரமாய்
ஒரு சிறு மணியை பெற்றெடுத்தாய் !

முயற்சியை விதைத்துவிட்டு - நீ
முன்னேற்ற வாழ்வு தேடி !

கோடி சுமைகளை பொடியாக்கும் - உன்
தைரியமான எதிர் நீச்சல் வாழ்கையில் !

வருட இறுதிதான் உனக்கு - என்றும்
வசந்தமான பிறந்த நாள் !

எதிர் வரும் காலங்களிலும் - இன்னும்
எல்லா நலமும் உடலில் பெற்று

இனி வாழும் நாட்களில் - மேலும்
எல்லா வளமும் பெற்று

நீடுழி வாழ வாழ்த்தும் ....................

அன்பு நெஞ்சங்கள் !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (18-Dec-11, 2:39 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 237

மேலே