குளம்

கடல் ஒரு
நுரைதள்ளி கக்கும்
கக்குவாயன் !
மேகமோ தன்
வியர்வையை சிந்தி
ஊரை நாசமாக்குபவன் !
ஆற்றங்கரையை நினைத்தாலே
குமட்டும் ஒரே
குடிகாரன் குமியடிக்கும் இடம் !

நானோ !

நான்கு பக்கமும்
கோட்டை கட்டி வாழுபவன் !

பல பூ மரங்கள்
என்னை பார்த்து அலங்கரிக்கும்
ஒரு கண்ணாடி !

தாமரை , அல்லி , மீன்கள்
நான் பெற்ற
அழகு மகள்கள் !

தென்றல் பயல்
என் மகன் , என்னை
அலைகளிப்பவன் !

கொக்குப்பயல்
என் மீன் பெண்ணை
கொத்திச் செல்லும்
செல்ல குழந்தை !

நான் சுத்தமானவன் !

வேற்றுமை எனக்கில்லை !

வேளாண்மைக்கும் உதவுபவன் !


இது ஒரு குளத்தின்
மீது உள்ள பாசத்திற்காக !

எழுதியவர் : சேதுராமலிங்கம்.u (20-Dec-11, 10:51 am)
சேர்த்தது : sethuramalingam u
Tanglish : kulam
பார்வை : 244

மேலே