நான் என் பயணத்தைத் தொடர்கிறேன்

நான் அதிகமான காமத்தால் பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம்; இல்லையென்றால் இது இவ்வயதின் இயல்பாக இருக்கலாம். காரணம், எனக்கு இன்னும் தெரியவில்லை.

எனது பதிவயதுக் காதலுக்குப் பிறகு நான் காதலை மீண்டும் உணர்வேன் என்று எனக்குத் தோன்றவில்லை. காதலின் இயல்பை அறிந்த பிறகு எந்தப் பெண்ணிடமும் காதல் ஏற்பட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நான் இப்போது பிரம்மச்சரியத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பாதையிலும் அதற்கே உரித்தான சில கடினங்கள் உண்டு என்பதை நான் அறிவேன்.

நான் உலக இன்பங்களை தியாகம் செய்யும் நோக்கத்தோடு பிரம்மச்சரியத்தைப் பற்றி சிந்திக்கவில்லை. என்னைப் பற்றி நான் அறிந்து கொண்டதன் காரணத்தாலேயே நான் பிரம்மச்சரியத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் கவர்ச்சியற்றவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்; நான் சிரிக்க சிரிக்க பேசுபவன் அல்ல என்பதை நான் அறிந்து கொண்டேன்; பெண்கள் என்னை விருப்போடு பார்ப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். இவையே என் பிரம்மச்சரியத்திற்கான காரணங்களாக அமைந்தன.

பிரம்மச்சரியத்தைத் தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டவன் காதலையும் காமத்தையும் அடக்கிப் பயனில்லை. அவற்றை அழித்து விட வேண்டும். இப்பக்கங்களை எழுதியதன் மூலம் நான் பிரம்மச்சரியத்தை நோக்கிய பாதையில் சில அடிகளை முன்னெடுத்துள்ளதாகக் கருதுகிறேன்.

எழுதியவர் : (20-Dec-11, 10:45 pm)
பார்வை : 530

மேலே