உனது அடையாளம்
ஒரு நல்ல ரசிகனே ஒரு நல்ல கவிஞன்
ஆக முடியும் வாமனனாக வந்தவன்தான் வான் அளந்தான்
ஈரடியில் எழுதுதிய வள்ளுவர்தான்
இலக்கியத்தில் உயர்ந்து நிற்கின்றான்
எந்த மொழியில் எழுதினாலும் மற்றவரை ரசிப்பது போற்றுவது ஒரு
நல்ல கவிஞனின் கவிப் பண்பு அதற்காக
அன்ன நடை கறக்கப் போய் தன்
நடையை இழக்கத் தேவை இல்லை
I ONLY APPRICIATE I DO NOT ADMIRE
போற்றுதல் பாராட்டுதல் சிறந்தது
அதீத மோகத்தில் தன்னை இழப்பது
உன்னை தனியாக அடையாளம்
காட்டாது ஆரம்பத்தில் போல எழுதுவது
ஒத்திகையாய் இருக்கலாம் போலச்
செய்பவன் சிறந்த நடிகன் ஆகலாம்
போல எழுதுபவன் தன் தனி அடையாளத்தை இழந்து நிற்பான்
இறைவனை இறைவன் படைத்த
இந்த இயற்கையை மானுடத்தை
அவனவன் மனோதர்மப்படி பாடுபவன்
ஆதர்ச அடையாளமாக காலத்தை
வென்று நிற்பான்
தமிழ்தாசன் தங்கள் ஆதரிச ஆசைக்கு
என் மனமுவந்த வாழ்த்துக்கள்
---கவின் சாரலன்
கவிக் குறிப்பு
"நான் என்பதன் அடையாளம் " என்ற தமிழ் தாசனின் கவிதைக்கு நான் அளித்த கருத்து
நீங்களும் படியுங்கள்
---அன்புடன்,கவின்