கூண்டு கிளி

விடுதலைப் பெற்றது கிளி
ஜோசியக்காரன் கூண்டிலிருந்து.

தேங்கி கிடந்த ஆசைகள் எல்லாம்
திரண்ட மேகமாய் மனதில் சுமந்து
விடுதலைப் பெற்றது கிளி

பச்சை கம்பள மலைகள் தேடி
பரந்து விரிந்த மரங்கள் தேடி
அடர்ந்து கிடக்கும் வனங்கள் தேடி
அசையும் தளிர் கொடிகள் தேடி

கிளர்ந்து எழுந்த ஆசையாலே
கிழக்கு மேற்கு திசைகளெட்டும்
அலைந்து பார்த்து
அயர்ந்தது கிளி

எங்கும் எதுவும் காணவில்லை
எல்லாம் பொய்யாய் , பழங்கதையாய்
பெருங் கனவாய் போனதினாலே
கூண்டினை தேடி வந்தது கிளி

எழுதியவர் : சுரேஷ் குமார் 007 (20-Dec-11, 10:55 pm)
Tanglish : koondu kili
பார்வை : 723

மேலே