அன்பே வெல்லும்!

சில வாரம் முன்னாலே,
எங்கள் வீட்டில் நடந்த கதை...

பள்ளிவிட்டு வந்த ஒரு மாலை நேரம்,
சிற்றப்பா.. என்றே, எங்கள் சின்ன மகள் கூப்பிட்டாள்
என்ன வென்று நானும் கேட்க,
பூனைக்கு ஏன் வயறு பெரிதாக இருக்கிறது என்றாள்,
பூனையின் வயிற்றில் சிறு குட்டிகள் வளருதேன்றேன்..
அதற்கடுத்த வாரத்தில்,
நான்கு குட்டிகள் போட்டது பூனை..
கருப்பு, கருப்பும் வெள்ளையும்,
பழுப்பு, பழுப்பும் வெள்ளையும்
என நான்கும் அழகாகவே இருந்தன..
கண் முழிக்காத குட்டிகளை பார்த்து
எங்கள் மகள் குதுகலித்தாள்,
அவைகளின் கீச்சு குரல் கேட்டு,
துள்ளி குதித்தாள்...
சில நாட்கள் சென்றது
குட்டிகள் ஓடியும் குதித்தும்
விளையாடித் திரிந்தன...
எங்கள் சிருமகளும் பார்த்து மகிழ்ந்தாள்...
பள்ளிக்கு போகும் முன்னும்
பள்ளிவிட்டு வந்த பின்னும்
பூனை குட்டிகளோடு விளையாடுவதே
எங்கள் மகளின் இனிய பொழுது போக்கு..

விளையாட்டு மயக்கத்தில்
வீதியில் ஓடிய குட்டிகள்,
வாகனத்தில் அகப்பட்டு
அந்தோ.. நசுங்கினவே,
இரெண்டும் போயினவே..

எங்கள் மகள் வாடி நின்றாள்,
இளமுகத்தில் சோகத்தை காட்டி நின்றாள்..
இருதினங்கள் எதுவுமே விருப்பமின்றி
செய்தாள் அவள்...
முன்றாம் நாளில் அவள் நன்கு சாப்பிட,
நான் சாப்பிடும் முன் யோசித்தேன்..

அன்பும் பாசமும் அவரவர் பார்வை..
நட்பும் நேசமும் தரும் தூயவாழ்வை..
அன்பே உலகம்.. அன்புதான் வாழ்க்கை!!

எழுதியவர் : சீர்கழி. சேது சபா (21-Dec-11, 1:28 am)
பார்வை : 476

மேலே