ஏன் இந்த மக்களிடம் ஈரம் இல்லை !!
நான் ஒரு தாய்
நான் ஒரு சகோதரி
நான் ஒரு சமூக சேவகி
இடுக்கியின் ஒரு புறத்தே
பல வளங்களைக்கொண்டவள்
புரட்சியாளர்களின் மொழி
அடக்குமுறை
பற்றற்ற செயல்களை
உடைத்தெறிந்து -இவர்களின்
ஈனச்செயல்களை
பொருள்கொடுப்பதை தவிர்த்து
ஓடுகிறேன்!!!
என்னிடம் தஞ்சம் புந்தவர்களின்
உதவிக்கரங்களை காப்பாற்ற
உதிரத்தால் வழியும் கண்ணீர்
உழைப்பால் களைத்துப்போன
கை கால்கள்
வித்திட முளைக்கும் ஏழ்மையின் உணர்வு
வியர்வையாய் சிந்தி வழிகிறது
உடலில் இருக்கும் நீரும் கரைகிறது
சுவாசிக்க ஒட்சிசனுக்கு தடை இல்லை
இந்த ஏழ்மை உயிரின்
ஒரு துளி பசி தீர்க்கும் நீருக்கு
தடை உண்டா ?
எத்தனை ஆண்டு கடந்தும்
நரைதுப்போகாது என் தலை
தளர்ந்து போகாது என் உடல்
தடையின்றி செல்கிறேன்
முடியும் அனால் முனைந்து பாருங்கள்
தகர்த்து எறிவேன் உங்கள் முகங்களை
பிள்ளைகள் பெற்று வளர்த்தேன்
பிரச்சனைகள் வரும்போது தாயாய்
புத்திமதி சொல்லியும் விட்டேன்
என் பக்கத்து வீட்டு கொள்ளுப்பேரனுக்கு
ஒருகுடம் நீருக்கு தடையா ?
பங்கம் வேண்டாம்
ஏன் இந்த சூழ்ச்சி ?
இன்னும் ஒரு மகாபாரதம்
சகுனியின் ஆட்சி
இங்கு வேண்டாம்
தேசம் எங்கும் பசுமை
வளம் கொட்டிதீர்க்கும் நாடு
ஏன் இந்த பொருள் இல்லா
கேள்வியில் வாழ்வுக்குள்
புகுந்து பலர் இடர்
பலர் மடிய
என் முன்னில் ஆட்சி மாறியது
குலுங்கி அழுதேனா ?
இல்லை
என் முன் எத்தனை கொடுமைகள் நடந்தேறின
நான் அழுதேன்
நீங்கள் உண்மை சொன்னீர்களா?
இப்பொழுது எப்படி வந்தது பந்த பாசம்
தாய் குழந்தைக்கு பால் கொடுப்பது இயற்க்கை
குழந்தை பிறந்ததும் முலையில் பால் சுரக்கவில்லை
என்று சொல்லும் கேளிக்கைகாரர்கள்
தங்களை உணர்ந்து வாழ்ந்துள்ளனரா ?
நடந்தேறும் நாடகங்கள்
விளிதுக்கொள்வீர் புத்திசாலிகளே
ஒரு வேளை நான் மடிந்தால்
என் கணவர் அடுத்த கரையில் தாங்கி நிற்பார்
சிலபொழுது என் கணவர் என்னுடன் சங்கமித்தால்
என் மகன் தாங்கி நின்று காப்பான்
ஒரு பொழுதும் நான் உங்களுக்கு
உங்கள் உயிருக்கு
எந்தவகையிலும் மறைவு செய்யமாட்டேன் !!!
தாய் அழுத கண்ணீர்
இந்த சேய் அழுகிற கண்ணீர்
எத்தனை முறை அடக்குவீர்
எத்தனை முறை அமுக்குவீர்
என் மக்களை கொல்ல
போராட்டங்கள் நடத்துங்கள்
அடக்குமுறையால் சட்டம் இயற்றுங்கள்
ஒரு பானை சோற்றில்
ஒரு சோறு பதம் என்றால்
உங்களில் ஒருவன்
நீதி சொல்லுவான்
செய்தும்காட்டுவான் !!!
என்னை தடைபோட
உங்களிற்கு உரிமம் இல்லை
நான் ஒரு சுதந்திர தேவி
என்மக்கள் என் தேசம்கடந்தும்
ஓயாது உதவுவேன்
மாறது உயிர் கொடுப்பேன்
இத்தாயிலும் ஈரம் உண்டு
ஏன் இந்த மக்களிடம்
ஈரம் இல்லை !!!!!!!!!!!!!
அகிரா