அயல்நாடு வாழ் இந்தியன் !

அறியாத மொழி ,
புரியாத மனிதர்கள் ,
நெரிசல் மறந்த பேருந்துகள் ,
தூக்கம் துறந்த இரவுகள் ,
சுதந்திரம் இல்லா காற்று ,
மௌனம் காக்கும் சாலைகள் ,
உறவுகளை தேடும் கண்கள் ,
கடந்து செல்லும் தேவதை பெண்கள் ,
பெயர் தெரியா உணவுகள் ,
இதயம் தகர்க்கும் விலைகள் ,
என்றும் வீழ்ச்சியில் என் பொருளாதாரம் ,
இவற்றில் தேய்கிறது என் வாழ்கை !!
- அயல்நாடு வாழ் இந்திய மாணவன் !!

எழுதியவர் : தீபன் சக்கரவர்த்தி (22-Dec-11, 5:21 pm)
பார்வை : 365

மேலே