முல்லை பெரியாறு
![](https://eluthu.com/images/loading.gif)
அன்று - அயல்நாட்டு
ஆங்கிலேய நண்பன்
சொந்த செலவில்
அணை கட்டியது - இப்படி
மல்லுக்கட்ட அல்ல
மக்களின் தாகம் தீர்க்க !
பாகுபாடின்றி - மக்கள்
நலம் பெற நினைத்தான் !
வீணாக ஓடிய நீரை தடுத்து
விலை நிலமாக்கினான் ! - இன்றோ
ஒப்பந்தபடியும் ஒத்துக்கொள்ளாமல்
சுயநலத்துக்காக மல்லுக்கட்டும்
அருகாமை அந்நியன் !
நீரில்லா எஞ்சிய நிலத்துக்கும்
விலை கொடுக்கும் - தமிழனுக்கு
வில்லங்கம் செய்யலாமோ !
பங்காளியானவனே
பங்கம் வைத்து பழிவாங்கி
பகையாளி ஆகாதே !...
மலையாளி நண்பா !....