நாசுக்காக சொல்கிறேன் ..
![](https://eluthu.com/images/loading.gif)
முல்லை பெரியாறு .
மக்கள்
பகுத்துண்டு வாழ
பரிமாறி சாப்பிட - அன்றோ
அடுப்பு கட்டிவிட்டான்
ஆங்கிலேயன் !
அடுப்பு கட்டிய இடத்துக்கு மட்டுமே
சொந்தமாணவனோ.............
பாத்திரம், பண்டம் - பல
செலவுகளையும் செய்து
சமையல் கூலியையும் ... தந்த
தன்மான தமிழனுக்கு - தன்
சுயநலத்துக்காக
பங்கம் வைக்க நினைப்பது -
நியாயமா ?...
தமிழன் வீரு கொண்டு எழுந்தால்
மலை தாங்குமா....