பழைய காதலி !
பழைய காதலி
பதமாய் பேசினால்
மறந்திடு என்றேன்
மரிப்பேன் என்றாள்
மாயை என்றேன்
சந்தேகம் என்றாள்
கடுஞ்சொல் ஏவினேன்
புண்ணியம் என்றாள்
நான் என்றேன்
நாம் என்றாள்
கெட்டவன் என்றேன்
நல்லவன் யார் என்றாள்..
நாளை என்றேன்
என்றென்றும் என்றாள் !!
அவள் பேசி முடிக்கும் முன்னே
நான் பேச தொடங்கினேன்
கண்ணீர் மொழியால் !!