பழமையை தொலைத்து விட்டோம்...

கண்மாய்கள் எல்லாம் கிரிக்கெட் மைதானமாய்...

கிணறுகளும், ஏற்றமிரைத்த கவளை வாளிகளும்

புதர் தூசிகளாய்...

ஏர் கலப்பை இரையானது கரையானின் உணவாக...

என் ஊர் தெருவினில் பழமையை பறைசாற்றி நின்றிருந்த

அரசமரம்...

புதுமைக்கு பயந்து மண்ணுக்குள்ளே புதைந்து போனதோ!

நள்ளிரவின் நிசப்தம்தனில் என் சிறுவயதில்

என்னை பயம் கொள்ள செய்த பண்டாரபாட்டும்,

சங்கொலியும், மணியோசையும் காணாமலே போனதே!

கள்வர்க்கு வசதியாகவோ எம் தெருவெங்கும் அமைதி....

புரளிகளில் புரள்கின்ற புதுமைக்கு எம் தெரு மக்கள் விதிவிலக்கா...

9 மணி நாழிகைக்குள் உறக்கம் புகுவது ஏனோ?

வருத்தமுறுகிறேன்....

என் தாத்தாவிடம் கதை கேட்ட என் வீட்டு ஒட்டுதின்னையை காணவில்லை...

புதுமை கலாச்சாரமாய் ,

மாறிவிட்ட கூராவரி கீற்றும் கூட

பழமையின் சாராம்சமே! பழமையை தொலைத்து விட்டோம்... நாம்...

எழுதியவர் : காளிதாசன்... (23-Dec-11, 4:36 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 279

மேலே