அகழ்நானூறு 82

அகழ்நானூறு 82

____________________________________

சொற்கீரன்



வடு போழ்ந்த கண்ணினாய்

ஒளிறுபு மின் அன்ன‌

நின் கண் வௌவி

கல்லென சமைந்தான் என்னே.

ஒருபிடி படியும் சீறிடம்

எழுகளிறு உவக்கும் உளத்தன்

இமிழ்தரு சிமையத்தான்

ஆயிரம் விண்ணும் நிவக்கும்

கவலை ஆறுகள் நீந்தி

சுரம்பல கடாஅத்து ஆங்கே

பொருளும் வளனும் ஈட்டி

அற்றைத் திங்கள் மின்னிய‌

அணிமுறுவல் இன்றும் ஏந்தி

அன்று கண்டாங்கு காண்குவன்

பெரும வருக இம்முக்கூடல் என‌

நீலக்குவளை கவிழ்ந்தவள் நீர்த்து

குண்டு சுனைக்குள் குழைநிழல்

சிரிக்கும் புல்லிய பொழுதின்

புகுதந்து நின்றாள் என்னே.

___________________________________________

இது நான் சங்கத்தமிழ்ச்சொற்கள் அகழ்ந்தெடுத்து காதலின் அகம் (உள்ளம்) நுழைந்து
எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை."அகழ்நானூறு" என்ற எனது தொகுதியிலிருந்து
எடுத்த கவிதை.

இப்படிக்கு
சொற்கீரன் எனும்
ருத்ரா இ பரமசிவன்
_______________________________________________________________________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன்(சொற்கீரன்) (24-Oct-24, 2:51 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 26

மேலே