அன்பு மகள்

பூலோகத்தின் இயற்கை அழகை
கண்டு ரசித்திட வந்தாயோ!

இல்லை புது உறவு என்னிடம்
கொண்டாட வந்தாயோ!

என் தாய் மீண்டும் மறுபிறவியில்
வந்தாயோ!

இல்லை மகளாக தன் மகனிடம் சில காலம்
வாழ்ந்து போகலாம் என்று வந்தாயோ!

என் அன்பு மகளே

என் ஆயுள் காலத்தையும் சேர்த்து
நீண்ட ஆயுளுடன் வாழ்க!!

எழுதியவர் : பிரதீப் அனிதா (24-Oct-24, 8:24 am)
சேர்த்தது : 🌻Pradeep Anitha🌻
Tanglish : anbu magal
பார்வை : 20

மேலே