மூன்றெழுத்து

அன்னை எனும் மூன்றெழுத்தில் பிறந்து
அன்பு எனும் மூன்றெழுத்தை உணர்ந்து
தந்தை எனும் மூன்றெழுத்தில் கலந்து
தமிழ் எனும் மூன்றெழுத்தில் சிறந்து
கல்வி எனும் மூன்றெழுத்தை கற்று
அறிவு எனும் மூன்றெழுத்தை வளர்த்து
உணவு எனும் மூன்றெழுத்தை உண்டு
நிலவு எனும் மூன்றெழுத்தை ரசித்து
நிலம் எனும் மூன்றெழுத்தில் வாழ்ந்து
வானம் எனும் மூன்றெழுத்தில் சென்று
சக்தி எனும் மூன்றெழுத்தை கொண்டு
கனவு எனும் மூன்றெழுத்தை கலைத்து
நினைவு எனும் மூன்றெழுத்தை நினைத்து
சோதனை எனும் மூன்றெழுத்தை மறந்து
சாதனை எனும் மூன்றெழுத்தை செய்து
கடமை எனும் மூன்றெழுத்தை நின்று
செயல் எனும் மூன்றெழுத்தை செய்து
தோல்வி எனும் மூன்றெழுத்தை மறந்து
வெற்றி எனும் மூன்றெழுத்தை அடைந்து
நன்றி எனும் மூன்றெழுத்தை நினைவில் வைத்து
நன்மை எனும் மூன்றெழுத்தை காப்போம்

எழுதியவர் : சிவராமன். ப (24-Dec-11, 7:28 pm)
Tanglish : moondreluthu
பார்வை : 704

மேலே