அன்பு....
சிறு சிறு சண்டைகளும்,
பொய்யான கோபங்களும்,
உன் நிலையில் இனி யாரும்
தரபோவதும் இல்லை,
தந்தாலும் நான் பெறபோவதும் இல்லை...
இல்லை என்றே சொல்ல தெரியாதவர் போல்
வேண்டும் பொருளெல்லாம் வாங்கித்தந்தாய்...
முதன்முதல் என்னை தாத்தவாக்கினவள்
என்று போகும் இடமெல்லாம்
மிதிவண்டியில் வைத்து ஊர் சுற்றினாய்....
தாயவள் அடித்தாலும் வாரியணைத்து
ஆறுதல் தந்தாய்...
படுக்கையில் படுக்கும் நாள் வரை
உன்னுடனே இருந்தது நம் இருவரையும்
சுமந்து சென்ற மிதிவண்டி....
யாரையும் அழவைக்க நினைக்காத நீயா
மொத்தமாய் அழவைத்தாய் என்னை....
முதன் முறை உன்னால் அழுகின்றேன்....
உன் கடைசி நிமிடங்கள்
இன்னும் கண் முன்னே...
நீ ரசித்தாய் கண்களில் உன் மரணத்தை...
நான் தரிசித்தேன் உன் ஆன்மாவை...
உன்பெயர் சொல்லி உணவருந்துகிறோம்
உனக்கென படையல் வைக்கின்றோம்...
கலங்காமல் செல் உன் பின்னால்
நாங்களும் வருவோம் ஒருநாள் அது வரை
எங்களை காத்திரு, எங்களுக்காய் காத்திரு...
(என்றும் மற்றவரை காயப்படுத்த நினைக்காத
என் தாத்தாவிற்கு இக்கவிதை சமர்ப்பணம்.)