வாழும் உன் புகழ் !

வள்ளலாய் வாழ்ந்து - உலகில்
இன்றும் வாழும் உன் புகழ் மங்காது !

தேடி வருவோருக்கு முதலில் உணவளித்த
உன் கருணை உள்ளம் மனதில் வாழும் இன்றும் !

வள்ளலாய் வாழ்ந்தது சென்றும் - இன்றும்
குடையாக நிற்கும் உன் கொடை !

நீ சொன்னதை செய்தாய் - அன்று
உன் சொல்லும் செயலாக அமைந்தது நன்று !

சிலரால் உன்னை புரியமுடியவில்லை -மக்களால்
பாராட்டை பெற்றவன் நீ !

உன் பாடல் வரிகளில் உள்ள கருத்து
அதுதான் தமிழ் மக்களின் உறுத்து !

எல்லோர் மனதிலும் அபிமான நடிகனாக
மக்கள் உள்ளத்தில் நல்ல முதல்வராக !

நீ மருத்துவமனையில் இருந்தபோது
நொறுங்கிய உன் அபிமானிகள் !

உன் உயிர் பிரிந்த அன்று - தமிழகத்தில்
உறைந்துபோன மக்களின் மனது !

உன் வரலாறை எழுத வரிகள் இல்லை
இன்றும் உன் புகழ் மண்ணில் வாழும் ...........

எம் . ஜி . ஆர். ஆக வாழும் உன் புகழ் !


-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (27-Dec-11, 11:55 am)
பார்வை : 1392

மேலே