காத்திருந்து காத்திருந்து ..
காத்திருக்கும் என் காத்திருப்பு மிகவும்
பிடிக்கிறது...
அது உனக்காக மட்டுமென்றால்...
வசந்தமாய் கடந்து போகிறது உன் நினைவுகளில்
என் ஒரு நாள் பொழுது...
அந்தி வரும் வேளையில் ஆறுதலடைய மறுக்கிறது
என் மனம்...
எப்படி கடத்துவேன் என் இரவு பொழுதை தனிமையில்
தனிமை பிடிக்குமென தத்துவம் பேசிய நான் தத்தளிக்கிறேன்
மனதெங்கும் மத்தாப்பாய் பூக்கும் உன் முகம் மட்டுமே நித்திரையில் கூட ...
காத்திருக்கிறேன் கனவுகளோடு...