பொருளாதார தேடலில் அவள் தனிமை...

காமம் நீங்கலாக கணிசமென வளர்ந்த அவள்

காதலின் ஒளிப்பேழை அவள் கண்ணெதிரே மறைகிறது..

அவனின் தற்காலிக பிரிவினில்...

அவன் கன்னக்குழிகளில் எத்தனையோ முறை

வருடிய அவளின் கைகளை உற்று நோக்க

அவளின் ரேகைகளில் தெரிகிறதோ பிரிவுக்கோடுகள்...

அவை பிளவுக்கோடுகளா......

சந்திக்கும் தருணமெல்லாம் அவன் தலை சாய்த்த

அவள் தாய் மடி வருடுகையில் பருத்தி பஞ்சாக பறக்கிறதோ
அவள் நினைவுகள்...

காதலர் தின பரிசாய் அவன் கொடுத்த கொலுசு முத்துக்களில்
ஒலிக்கும் இனி அவனின் காதல் ரகசியங்கள்...

அவனுக்கென தன்னை அழகாய் பாவித்து அனுதினம் அவள் நோக்கும் கண்ணாடியில் தெரிகிறான்

அவள் கருவிழி பிம்பமாய் இன்னும் அழகாக..

எழுதியவர் : காளிதாசன்... (27-Dec-11, 3:48 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 256

மேலே