குடி மகனாக இரு தேசத்திற்கு !

இந்த குடியால் இன்னும்
நொடிந்து போன பல குடும்பங்கள் !
இன்னும் இவன் தன்னை வருத்தி
சார்ந்த்தவர்களுக்கும் தரும் தவறாத வேதனை !
குடித்து விட்டு கெட்டும் மண் கோட்டை
மனதில் தோன்றி மறையும் மாயவேட்டை !
குடிகாரன் குடல் வெந்து சாவது உறுதி
இவனை சார்ந்தவரின் வாழ்வு நிலை குருதி !
குடி பழக்கம் மறக்க நினை
குடும்ப நிலை உயர உழை !
குடி மகனாக இரு இந்த தேசத்திற்காக
குடிப்பதை நிறுத்து உன் குடும்பத்திற்காக !
-ஸ்ரீவை.காதர் -