என் காதலிக்கு திருமணம் 555

பெண்ணே.....

உனக்கு திருமணம் என்று
பத்திரிகை அனுப்புகிறாய்...

உனக்கு மஞ்சளிட்ட பத்திரிகை...

எனக்கு கருபிட்ட பத்திரிகை...

உனக்கு மணமாலை...கழுத்தில்...

எனக்கு பிணமாலை...கழுத்தில்...

உனக்கு கழுத்தில் தாலி...

எனக்கு கால் விரலில் கட்டு...

உனக்கு கைகளில் பூச்செண்டு ...

எனக்கு கைகளில் விஷமுண்டு...

உனக்கு கெட்டி மேளம் ...

எனக்கு தார தப்பட்டை...

உனக்கு பால் கொடுத்து
அனுப்புகிறார்கள்...

எனக்கு பால் ஊற்றி அனுப்புகிறார்கள்...

உனக்கு மணமேடையில் பூக்கள் ...

எனக்கு வீதி எங்கும் பூக்கள்...

நீ கணவனோடு செல்கிறாய்...

நான் உன் நினைவுகளோடு
செல்கிறேன்...

நீ கணவன் வீட்டுக்கு ...


நான் சுடுகாட்டுக்கு .......

கண்ணீருடன் முதல்பூ,,,,,,,

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Dec-11, 2:06 am)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 574

சிறந்த கவிதைகள்

மேலே