இனிய புத்தாண்டே வருக.! - பொள்ளாச்சி அபி

இனிய புத்தாண்டே வருக..!
இறந்தகால துன்பங்கள் மறைய,

இதயங்கள் அன்பால் இணையட்டும்
உதயங்கள் உறவுகளாய் மலரட்டும்.
உன்னதங்கள் வாழ்வில் பெருகட்டும்.
உன்மத்தங்கள் அழிந்து தொலையட்டும்.

எண்ணங்கள் நேர்வழி பிறக்கட்டும்.
ஏதிலார் தம்நிலை மாறட்டும்
வறுமைக்கு வறுமை பிடிக்கட்டும்
வாழ்வெலாம் செழுமை செழிக்கட்டும்

இருப்பவன் எல்லாம் கொடுக்கட்டும்
இல்லாதவன் வாழ்த்தி மகிழட்டும்.
செல்வமும்,வறுமையும் சீராகட்டும்
செகத்தில் இந்தியா சிறப்பாகட்டும்

மதமும்,சாதியும் மறையட்டும்
சமத்துவம் எங்கும் பிறக்கட்டும்.
சரிநிகர் வாழ்வு தொடங்கட்டும்
சமுதாய வீதி சுத்தமாகட்டும்.!

இலக்கியங்கள் இதையே பேசட்டும்
இதுவே நமதுலட்சியம் ஆகட்டும்.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (1-Jan-12, 2:55 pm)
பார்வை : 268

மேலே