இனிய புத்தாண்டே வருக...!!

இனிய புத்தாண்டே வருக..
என் இனிய எண்ணங்கள் சிறக்க
நல்வழி தருக...

அழகு புத்தாண்டே வருக...
எங்கள் இல்லங்கள் இனிமை பொங்க
நல்லவை தருக...

இளைய புத்தாண்டே வருக...
என் தமிழகம் மேலும் உயர
நற்திட்டம் தருக...

சிறந்த புத்தாண்டே வருக...
எங்கள் நாடு வளத்தில் பெருக
நல்முன்னேற்றம் தருக...

அற்புத புத்தாண்டே வருக...
என் மனித குளம் தழைக்க
நல்அறிவு தருக...!!

எழுதியவர் : சீர்காழி. சேது சபா (1-Jan-12, 1:26 pm)
பார்வை : 524

மேலே