புத்தாண்டே வாராயோ

வாராயோ புத்தாண்டே வாராயோ
பூவுலகில் அமைதி நிலவிட
புது மணப்பெண்ணாய் நீ வாராயோ
வாழ்விழந்து வாடி நிற்கிறோம்
எங்களை மகிழ்விக்க நீ வாராயோ !

தேசத்தை இழந்திட்டோம்
தேவைகளை மறந்திட்டோம்
தாகங்கள் கூடி வர
தவிக்கிறோம் நாங்கள்-எம்
தாகம் தீர்த்திட நீ வாராயோ !

துயதை நினைக்கிறோம்
துன்பங்கள் சுமக்கிறோம்-எம்
துன்பம் துடைத்திட நீ வாராயோ !

இடு இணையற்ற சுமையோடு
இருளிலே வாழ்கிறோம்
இருள் போக்கும்
ஒளியாக நீ வாராயோ !

சதிஎனும் நெருப்பிலே
சருகேனவே எறிகிறோம்
நீதி நேர்மையை பேணியதால்
நின்மதி இழந்து வாழ்கிறோம்
நீதி நேர்மையை
நிலைநாட்டிட புத்தாண்டே நீ வாராயோ,,,!!!
,,,,,சிந்துஜா சுதர்ஷன்,,,,,[விஜய் கரன்]

எழுதியவர் : விஜய் கரன் (1-Jan-12, 9:35 am)
சேர்த்தது : somapalakaran
பார்வை : 313

மேலே