சிந்தனை செய் மனமே 2

தவறுக்காக தண்டிக்கப்படுகிறான்
அது சரிதான் என்று புலப்படாமல்

உரிமையில்லாதவன் பெருமையை அனுபவிக்கிறான்
அது தவறு என்று புலப்படாமல்

சுரண்டுபவன் காவி உடையுடன்
சுரண்டப்படுப‌வன் ஆவி உடையுடன்

செல்வந்தன் வருடம் முழுவதும் கோடையை அனுபவிக்கிறான்
பொருளற்றவன் நிமிடம் அறுபதும் உடலைக் கரைக்கிறான்

அன்பைப் படைத்தவன் அட்டை குடிசையிலே
ஆன்மாவைத் தொலைத்தவன் அரசாங்கப் பதவியிலே

'கட்'டடித்தவன் கல்வி அமைச்சர்
கற்றறிந்தவன் அவனின் எறிச்சல்

அரசாங்கப் பலகையும்
'பல'கையை நீட்டுகிறது

அரியனை உடையவன் அழகில் வீழ்கிறான்
அனுதினம் உழைப்பவன் அழுதே மாழ்கிறான்

செவ்வாய் கிரகத்தில் இடம் தேடுவதும் இதற்க்குத்தானோ?

இவையனைத்தும் இறைவனின்
எழுத்துப்பிழையா
இலக்கணப் பிழையா?

நானறிந்தவரை இவை இரண்டிற்கும் தண்டனை கிடத்ததுண்டு

வாதத்திற்கு இடைவெளி விடுகிறேன்
இறைவனிடமிருந்துமொரு குரல் வருகிறது



எவ்வளவு வேண்டும்???????????????????????????????????

சிந்தனை செய் மனமே.......................


சமத்துவம் போதிக்கும் பாடசாலைகளும்
சாதிச்சான்றிதழ் கேட்கிறது.

மெழுகின் தத்துவம் தலைகீழாய் மாறியது
மற்றவரை வறுத்தி குளிர்காய்கிறான்

அகத்தோற்றம் அழுக்காய் இருக்க
புறத்தோற்றதிற்கு அடிமையாகிறான்

கடன் எழும்பை முறிக்கும் காலமும் வந்தது

அரிக்கையை படிப்பது அரைக்கிழவன்கள்
அரிசியை வடிக்கவா பட்டதாரிகள்?

பிரச்சனையை பொத்தி வைக்கிறான்!
தீர்ப்பை ஒத்தி வைக்கிறான்!
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவன்
இயற்கை மரணம் அடையும்வரை

புதிய சட்டங்கள் இயற்றபடும்
இரண்டு நாட்களுக்கு அமல்படுத்த‌

காவலர்கள் பொறுப்புடன் சாலையில்
வழி பிறந்ததென்று வாயை பிழக்க வேண்டாம்
அது மாசக்கடைசி!

காவல் துறை உங்கள் நன்பன்
கொடுக்கல் வாங்கல் இருக்கத்தான் செய்யும்

மனித வாழ்வை மீன்கள் அறிந்திருந்தால்
கடல்மட்டமும் உயர்ந்திருக்கும்


அட்டையை சுரண்டுகிறது ஒரு கூட்டம்
மக்களை சுரண்டுகிறது மறு கூட்டம்
ஒரு கூட்டம் பிழைத்துக்கொள்ளும்

வாழ்க்கை திரைப்படமானது
அனைவரும் ஹீரோவின் வ்ரவை எதிர்பார்த்து
யாருக்கும் தெரியவில்லை ஹீரோ யாரென்று

சமத்துவதிற்கு பொராடினால்
சாமியாகிவிடுவார்கள் இருவகையிலும்


நன்றாக எழுதப்பட்ட காவியத்தில்
மட்டமான வார்த்தைகள் இடம்பெருகின்றன‌
வேரொன்றுமில்லை
இறைவனின் இழைபாறுதலுக்கு கொடுக்கப்பட்டது மட்டமான சரக்கு


மீண்டும் வாததிற்கு இடைவெளி விடுகிறேன்
இப்பொழுது அதே குரல் சற்று சத்தமாக‌

இவையணைத்தும் எதிர் கட்சியின் திட்டமிட்ட சதி..............................


அங்குமா???????????????????

மனிதா
உன் சமூகம் அறியாமையால் பூட்டப்பட்டுள்ளது.
இந்தப்பூட்டை திறக்கும் சாவி
உன்னிடம் என்றும் உள்ள சாவி
உணர்ச்சியை திறக்க தகுந்த சாவி
சிந்தித்தால் கிடைக்கும் அந்தச் சாவி

சிந்தனை செய் மனமே..................................

எழுதியவர் : ஜெ.நாகபாண்டி (1-Jan-12, 8:55 am)
பார்வை : 411

மேலே