அனுமன் பாய்ச்சல்
அனுமன் பாய்ச்சல்-இலங்கையை
அழித்திட்ட ஆவேச பாய்ச்சல்....?
நானும் முயற்சிக்கின்றேன்-இன்றே...!
அனுமன் பாய்ச்சல்...?
அனுமன் பாய்ச்சலில்..!
ஆண்டுகளை தாண்டிவிட்டால்...?
மூவிறு ஆண்டுகள் தாண்டிவிட்டேன்
மழலையின் கல்விக்கு-முடித்துவிட்டேன்
மகத்தான நுழைவுத்தேர்வு
கல்வி தந்தைக்கு...?
கொடுத்துவிட்டேன் என் கல்லூரி கட்டணத்தை....!
இன்னும் முயற்சிக்கின்றேன்
மூவாறு ஆண்டு தாண்டிவிட்டேன்....?
தன்னிருப்பை மறந்துவிட்டேன்....!
தனித்துவத்தை இழந்துவிட்டேன்....!
தன்முனைப்பை விட்டுவிட்டேன்....!
இன்னும் முயற்சிக்கின்றேன்...?
இரட்டிப்பான பாய்ச்சல்....!
கடமைகளை முடித்துவிட
கட்டுப்பாடில்லா பாய்ச்சல்
கடந்துவிட்டேன்.....அகவை ஐம்பதை......!
பல சொந்தம் இழந்துவிட்டேன்
பரிதவித்து நிற்கின்றேன்.....?
வினைப்பயனை அனுபவித்து
விதிப்பயனை முடித்துவிட்டேன்
பார்த்தும் விட்டேன்.....?
பால்முகம் மாறா பேத்தியை....!
ஆஹா ! - கடந்து விட்டேன் என்
ஆயுளின் பாதியை.....! விரும்பவில்லை மீதியை.....?
ஆண்டுகளை கடந்துவிட
நானும் முயற்சிக்கின்றேன்.....?
அனுமன் பாய்ச்சல்......!