'ஆயுத' எழுத்து

கவிதை எழுத வரிகள் வேண்டும்
வரிகள் இல்லை
வலிகள் உண்டு
அனுபவத்தின் அடிமை நான் .

உபசரிக்க உணவு வேண்டும்
உணவு இல்லை
உணர்வு உண்டு.
வறுமையின் பிடியில் நான்.

வாழ்த்த வயது வேண்டும்
வயது இல்லை
வளர்ப்பு உண்டு.
ஈன்றவளின் பக்குவத்தில் நான்.

கொடுக்க பொருள் வேண்டும்
பொருள் இல்லை
பொறுமை உண்டு
எதிர்காலம் என்கையில்.

வீழ்த்த வீரம் வேண்டும்
வீரம் இல்லை
விழிகள் உண்டு.
அன்பின் ஆயுதம் என் கையில்.
பார்வையின் பக்குவத்தில் உள்ளது உலக உண்மை.

இன்பத்தில் துன்பத்தை உருவாக்குகிறான்
வரதட்சணை கல்யாணம்

துன்பத்தில் இன்பத்தை உருவாக்குகிறான்
அரசியல் வாதியின் அறிக்கை

மனிதனாய் பிறந்தவன் மக்கி மாணிக்கமானான்.
மற்றதாய் பிறந்தவன் மக்கி மண்ணானான் .
மாணிக்கத்தின் மதிப்பு அறிந்தவரா நீங்கள்?

அளவுக்கு அதிகமாய் நிலம் வாங்குகிறான்
ஆறடி போதுமென்றால் அனைவருக்கும் வேண்டுமென்கிறான்.

வயதை வளர்க்கிறேன் வறுமையை ஒழிக்க
வறுமை வளர்கிறது வயதை கரைக்க

உணர்ச்சியை வெளிப்படுத்த எழுத்து உண்டென்றேன்
உடலின்
ஒவ்வொரு ரோமமும்
எழுந்து நின்றது
எனக்கொரு எழுதுகோல்
வேண்டுமென்றது.

ஆயுதம் ஏந்தினேன்
அரிவாள் அல்ல
அறிவால்.

நூலக வாசலை தேடினேன்
அதனை தீட்ட.

அறியாமை ஆமை அழியா ஓட்டினுள்ளே
சான்றோர் தீயிட்டால் அழியும் அரை நொடியில்.

காதலிக்காக கையில் கீறிக்கொள்ளும் இளைஞன்
கழுத்தில் கீரியும் காதில் விழாமல் நிற்கிறான்

இள இரத்தமும் இளைபாறினால்
களை எடுக்க யார் வருவார்?

எங்களுக்கும் வேலையில்லா திண்டாட்டம்

மனிதனை எதிர்பார்த்தபடி



மனிதம்....................

எழுதியவர் : ஜெ.நாகபாண்டி (1-Jan-12, 11:51 pm)
பார்வை : 515

மேலே