புதிய உறவுக்கு ( வரவுக்கு ) பூரிப்பு கவிதை...

சின்னம்மா , கண்ணம்மா...
எங்க வீட்டு எஜமானியம்மா...
பாரும்மா...பாரம்மா..
என்னை கண் திறந்து பாரம்மா...

உன் ரோஜா பூ இதழ் விரித்த சிரிப்பு..
இதைவிட உலகத்தில் வேறில்லை சிறப்பு..
உன் முதல் அழுகை ஓசை
என் இதய ஓசை அது அறியும்

உன் பிஞ்சு விரல் என் கை பற்றையிலே
என் பாசம் உள்ளே கொப்பளிக்கும்..
உந்தன் பூ மேனி பனி வாசம்...
எனை விட்டு விலகாதிருக்க வேணும்...

ஹாஜி வைச்சாங்க பேர் உனக்கு...
அகிலத்தை ஆளபோரான்னு தெரிஞ்சதாலே...
முதலில் ஹாஜிமா தூக்கியதாலே...
உன் வாழ்க்கையில் பரக்கத்து பொங்கிடுமே...

பெருமையா சொல்லிக்கோ...
பொறுமையா கேட்டுக்கோ..
சொந்த பந்த உறவுகள் எல்லாம்
உன் காலடியில் கிடைக்குதுன்னு...

பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா,சின்னம்மா,
மாமி,மாமா,மச்சிமார், லாத்தா,நானா
சொல்லிகிட்டே போனாலும்
லிஸ்டு மட்டும் முடியாது..

லிஸ்டு மட்டும் பெரிசில்லைமா ...
இவங்க வைச்சு இருக்கிற புரியமும் குறைவு இல்லை...
வேஷம் இல்லா நேசம் காட்டும்
பாச குடும்பத்தின் புதிய வரவு நீதானம்மா ..

சின்னம்மா , கண்ணம்மா...
எங்க வீட்டு எஜமானியம்மா...
பாரும்மா...பாரம்மா..
என்னை கண் திறந்து பாரம்மா...

எழுதியவர் : கலிபா சாஹிப் (1-Jan-12, 10:03 pm)
பார்வை : 442

மேலே