மெரீனாவில் ஒரு புத்தாண்டு அனுபவம்
![](https://eluthu.com/images/loading.gif)
கடல் அலைகளை ரசித்து கொண்டுறிந்த நேரம்.....
நிலவை கண்டு உலகை மறந்த நேரம்....
மக்களின் கூட்டம் நிரம்பி கொன்டிருந்த நேரம்....
சாலைகளில் காவல் துறையின் கண்காணிப்பு நேரம்...
இரண்டு சக்கர வாகனங்கள் சாலையில் நெருப்பை
உமிழ்ந்து சென்ற நேரம்.....
திடிரென்று காதுகளை பிளக்கும் ஓசை கேட்ட நேரம்......
திரும்பி பார்த்தால் ஆனந்த வெள்ளத்தில் மக்களின் ஒரே வாசகம்....
தெருவெங்கிலும் எதிரொலிக்கும் ஒரே வாசகம்...
வயது வேறுபாடு இல்லாமல் அனைவரும்
மகிழ்வுடன் சொல்லும் ஒரே வாசகம்....
கட்டி தழுவிய புது நண்பர்கள் அறிமுகத்திற்கான ஒரே வாசகம்....
காவல் துறையினர் நண்பர்களாக கைகுளுங்க வைத்த வாசகம்....
ஒற்றுமையை உணர வைத்த வாசகம்.....
எல்லோர் காதுகளிலும் கேட்ட ஒரே வாசகம்...
எல்லோர் வாய்களிலும் உச்சரித்த ஒரே வாசகம்....
""""இனிய புத்தாண்டு வாழ்த்துகள்"""""
இனிதே அறிமுகமானது 2012 ஆம் ஆண்டு!!....