தாய்மையின்......

முதன் முதல் தன் குழந்தைக்கு
கொடுத்த முத்தத்தில் சிலாகிக்கும் நொடிகள்..

முதன் முதல் குழந்தையின் மழலை
மொழியில் அம்மா என அழைக்க கோடி
பரிசு ஒரு நொடியில் வாங்கியதுபோல் ஒரு கொண்டாட்டம்...

அழும்போது அள்ளியணைத்து தூக்கி
ஆறுதல் தரும் மனம்....

நிலவைக்காட்டி சோறூட்டுகையில்
நிலவுக்கே ஊட்டியது போன்ற பெருமை...

தன் மழலை கிறுக்கும் கிறுக்களில் கூட
கவிதையை காணும் ரசனை....

குறும்புத்தனங்களை கண்டித்தாலும்
உள்ளூர ரசிக்கும் மனம்...

தன் பிள்ளையின் எச்சில் சோற்றை
தேன் ஊற்றியதாய் உண்ணும் சந்தோஷம்...

பிஞ்சு தளிர் பள்ளி செல்ல அந்த குழந்தை
கூடவே தன் மனமும் பள்ளி செல்லும் உற்சாகம்...

புரியாத பேச்சிலும் அதன் தேவையை
உணர்ந்து கொள்ளும் அறிவு....

இவையனைத்தும் தாய்மைக்கு மட்டுமே சொந்தம்...

எழுதியவர் : anusha (4-Jan-12, 3:50 pm)
Tanglish : thaimayin
பார்வை : 220

மேலே