நட்பின் வளர்ச்சி எப்போதும் இனிமை !

சைக்கிளில் ட்ரிபிள்ஸ் போயி
சதக்குன்னு சாக்கடையில் விழுந்தது..!
காமௌன்ட் சுவர் ஸ்கூலில் ஏறி குதித்து
கரெக்ட் அட்டெண்டன்ஸ் கொடுத்தது..!
மீசை அரும்புவதற்கு முன்னாலே...
ப்ராகரஸ் ரிப்போர்ட்டில் பள்ளியில்
பார்க்காத " A " கிரேடு சான்றிதழை
பயப்படாமல் சினிமாவுக்கு.....
சேர்ந்து போய் பார்த்தது..................!
திருட்டு தம்.....! கிண்டல் கேலி....!
எல்லாவித குறும்புச் சேட்டைகள்....!
அந்த சைக்கிள் ஒட்டிய நண்பன்
IPS முடித்து காவல் துறையில் இருக்கிறான்..!
காமௌன்ட் சுவர் ஏறிக் குதித்தவர்களில்...
நான் IAS முடித்து மாவட்ட ஆட்சியாளராக இருக்கிறேன்...!
ட்ரிபிள்ஸ் சைக்கிளில் பின்னால் கேரியரில் இருந்தவன்
இப்போது எங்களை விட வாழ்கையில் முன்னால் வந்து
எங்களை கட்டுப் படுத்தும் மந்திரியாக இருக்கிறான்...!
இப்போது வேலை நிமித்தமாக சார் என
ஒருவருக்கொருவர் அழைத்துக் கொண்ட போதிலும்....
டேய் மச்சான் சூப்பர்டா... சின்ன வயசில்
உரிமையோடு சேட்டைகளில் ஜெயித்து
சொல்லிக் கொண்டது இன்னும் செவிகளில் ஒலித்தபடி...!
நட்பின் வளர்ச்சி எப்போதும் இனிமை !

அன்புடன் ஹரி

எழுதியவர் : (7-Jan-12, 9:35 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 312

மேலே