என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து.....

தோள் கொடுக்கும் தோழனாக
நீ தோள் கொடுத்தாய் பலமுறை எனக்கு ...
வருத்தமான தருணங்களையும் மகிழ்வாக்கும்
உன் வாஞ்சையான பேச்சுக்கள்..
மொபைல் கடையில் நாம் அடிக்கும் கூத்திற்கு
சரிசமமான சந்தோசம் வேறெங்கும் கிட்டாது..
பெருசு முதல் சிருசுவரை பாரபட்சமே
பாராது நக்கல்விடும் நக்கல் நாயகன் நீ...
கோபம் வருத்தம் என எது இருந்தாலும்
அந்நேரமும் நீ காமடி செய்து கலகலப்பாய் இருப்பாய்...
கோபத்தை தவிர வேறேதும் அறியா நான்
உன்னை கண்டு பலமுறை பொறாமை கொண்டிருக்கிறேன் ..
எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ளும்
இயல்பு உனக்கு மட்டுமே சாத்தியம் ....
மதத்தால் வேறான நம்மை
மனதால் ஒன்றாக்கியது இந்த "நட்பு"....
உன்னை நண்பனாய் எனக்களித்த "நட்புக்கு"
நான் நாளெல்லாம் நன்றி சொல்லுவேன் ...
இன்று பிறந்த உனக்கு இனியநாளில் பரிசாய்
இக்கவிதை விட சிறப்பாக ஏதும் என்னால் தந்துவிட முடியாது ...
நாளெல்லாம் நட்புடனே நாமென்றும் நடைபோட
ஆண்டு நூறு நீ கடந்து ஆனந்தமாய் நீ வாழ .
நட்பின் வாழ்த்துக்கள் இந்த
நண்பனின் வாழ்த்துக்கள் ..........
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா ( ஹனி )பா.......