திருமணம்.......?
சுதந்திரக்கிளியை
கூண்டுகிளியாய் மாற்றுவது
திருமணம்.....?
கூண்டுடைக்க வழியின்றி
கூட்டிலிருக்க மனமின்றி வாடும்
கிளிகளாய் இன்று பலபேர்.....
சுற்றும் பட்டாம்பூச்சியை
வாலில் நூல் வைத்து கட்டுவது
திருமணம்...?
நூலோடும் போகாமல்
வாலறுக்க முடியாமல் போராடும்
பட்டாம்பூச்சியாய் பலபேர்....