நீ வேண்டும்...!!

எதிர் பார்த்து காத்திருக்கிறேன் இன்னும் எழுதாத உன் மடலுக்காக.

முழு பாடல் கேட்டபோதும் உன் முனு முனுப்பில் திருப்த்தி அடைகிறேன்.

நீ கடந்து செல்லும் ஒரு நிமிடத்திர்க்காக கால் நோக காத்து கிடக்கிறேன்.

கவிதை எழுத கை ஏடு எடுக்கிறேன் என்னவனின் பெயர் எழுதியதும் முடித்து விடுகிறேன்.

சராசரி பார்வயிலேயே இத்தனை காந்தமா?

சரச பார்வை பார்த்தால் என் கதி என்னவோ என என்னவனின் விழி அழகில் கிரங்கி போகிறேன்.

ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் உன் இதழ் அசையும் அழகை கண்டு மயங்கி போகிறேன்.

உன் இறுக்கத்தில் உலகம் மறந்து இறுதிவரை லயித்து கிடக்க துடிக்கிறேன்.

ஏனோ?

என் காதலை சொல்ல முடியாமல் தொடர்ந்து தோற்று கொண்டே இறுக்கின்றேன் உன்னிடம்.

அடை மழைக்கு அஞ்ஜாத பயிர் போல என் காதல் மீண்டும் மீண்டும் தலை தூக்குகிறது உன் முன்...!!!!

எழுதியவர் : வி.லலிதா (11-Jan-12, 5:22 pm)
பார்வை : 3694

மேலே