பள்ளி பருவம்...,
அம்மா....,
நேர் எடுத்து சிவீவிட்ட
'பரட்டை தலை'- அதில்
கொஞ்சம் எண்ணெய்,
"கண்களில்"
காய்ந்துபோகாத நீர்அருவி....,
மூக்கிலிருந்து வெளியேறும்
"வெள்ளையன்"
ஒதடுகளை மூடாமல்- மெல்லிய
சத்தத்துடன் முனகல்,
"வாயில்" அக்கா வாங்கி தந்த-மிட்டாய்
கிழிசல் சட்டையில்! அம்மாவின்
கைத்தையலையும் தாண்டி- 'பின்னுசி தையல்'
"இடுப்பில்" நிற்காத அரை கால்- பேண்ட்
அதில் ஒரு 'போஸ்ட் ஆபீஸ்'
நான் பள்ளி செல்வேன! என- அப்பாவின்
பார்வை...,
"தோள் பையில்"
மதிய சாப்பாட்டுக்கு-ஒரு 'தட்டு'
பக்கதிலிருபவனை அடிக்க- ஒரு 'சிலேட்'
அடிக்கடி சாப்பிட 'மாவு பென்சில்'
மென்று கொண்டிருக்கும்போதே- எனக்கு
பின்னால் அந்த 'ஒன்னாம் வகுப்பு'
டீச்சர் நிற்க...,
என் பிஞ்சு பாதங்கள் பள்ளியை நோக்கி
ஓடி போன 'இனிமையான பருவம் '
இனி என் வாழ்வில் வருமா....,?