புது பொங்கல்

பொங்கல் வருகுது பொங்கல் வருகுது
புத்தொளி எங்கும் வீசவே!
பாலும் சுவையும் கலந்ததுவே
ஒன்றாய் அரிசியில் கலந்ததுவே
அன்பும் பாசமும் விரைந்திடவே
அழகாய் வருகுது புது பொங்கல்

ஆன்றோர் ஆசிகள் வழங்கிடவே
அலையாய் வருகுது புது பொங்கல்
எத்தணை துயரம் இருந்தாலும்
எல்லோர் வாழ்விலும் மகிழ்ந்திடவே
ஏழைகள் வீட்டில் மகிழ்ந்திடவே
ஏற்றமும் என்றும் கண்டிடவே
அழகாய் வருகுது புது பொங்கல்

உழவர் வாழ்வில் விளக்கெரிய
உள்ளவர் என்றும் அருள்புரிய
ஊற்றாய் அன்பை பொழிந்திடவே
வானும் ஒன்றாய் மலர்ந்திடவே
வாழிய வாழிய பல்லாண்டு...

மேகநாதன்

எழுதியவர் : மேகநாதன் (13-Jan-12, 5:44 pm)
சேர்த்தது : மேகநாதன்
பார்வை : 329

மேலே