சோதிடம் கவிஞர் இரா .இரவி

சோதிடம் கவிஞர் இரா .இரவி
உழைக்காமல் உண்ணும்
சோம்பேறிகளின் உளறல்
சோதிடம்
மடக் கட்டங்களால்
மனக் கட்டிடம் தகர்ப்பு
சோதிடம்
எந்த சோதிடனும்
சொல்ல வில்லை
சுனாமி வருகை
இடித்துக் கட்டியதில்
நொடித்துப் போனார்
வாஷ்துப் பலன்
கடவுளைப் போல
கற்பிக்கப்பட்ட கற்பனை
சோதிடம்