தமிழர்களே உணர்ந்திடுங்கள்
தமிழர்களே
இங்கே நீங்கள்
ஒவ்வொரு
பட்டுப்புடவை
வாங்கும் போதும்
அங்கே ஒரு ஈழத்தமிழச்சியின்
புடைவை வெள்ளை
ஆக்கப் படுகின்றன
இங்கே தீபாவளி அன்று
நீங்கள் ஏற்றிவைக்கும்
ஒவ்வொரு
தீபங்களின்போதும்
அங்கே என் தமிழனின்
இல்லங்கள்
தீக்கிரையாக்கப் படுகின்றன
இங்கே
தமிழன்னையின்
நெற்றியில் நீங்கள்
ஒவ்வொரு முறை
திலகம் இடும்போதும்
அங்கே ஒரு
தமிழச்சியின் திலகம்
பறிக்கப்படுகின்றன