காதலிக்கு ஒரு கடிதாசி

அன்புள்ள காதலியே !
மௌனத்தின் சாயலே !
மந்திரப் புன்னகையே !
நீ எங்கிருக்கிறாய் ?
கனவிலே !
நீ என் தூக்கத்தை
காயப்படுத்திய போது கூட
நான் கலங்கியதில்லை
உன் பிரிவு
என்னை கொல்லுதடி...........
நெருஞ்சி முட்களை
சுவாசித்தது போல்
நெஞ்சில் குத்துதடி............
கடல் கடந்து
சென்றவனின் பரிதவிப்பு.............
காணுகின்ற காட்சி எல்லாம்
நீயாகி தவிக்கின்றேன்
புன்னகை பூத்த முகம்
புலம்ப வைத்து சென்றதேனோ?
என் செல்லமே!
நீ பார்த்தால்
அதிர்ந்து போவாய்
காய்ந்து போன
அருவியின் சுவடுகள்
என் கன்னங்களில்...........
நீ பிரிந்த போது
சிந்திய கண்ணீர்
பித்தனான
என் நினைவுகளில்.............
மின்னலை எடுத்து
மாலையாக்கி வைத்திருக்கிறேன்
மீண்டும் நீ வருவாய் என...........
சன்னல் கம்பிகளில்
காவியமாய் நீ
கடைத்தெருவில்
ஓவியமாய் நான்
கண்கள் பேசிய கவிதை
கானல் நீராய் போனதடி..........
நிலவென்றுதானே உன்னை நான்
ரசித்திருந்தேன்
நீ ஏன்?
கார்மேகத்துக்குள் கரைந்து போனாய்
நீ வரும்வரை
என் விழிமலர்கள்
உனக்காக காத்திருக்கும்
என்பதற்கு
என் சிவந்த விழிகளை
சாட்சியாக்குகிறேன்!

எழுதியவர் : porchezhian (16-Jan-12, 7:32 pm)
பார்வை : 466

மேலே