வாழ்க "எழுத்து"
எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்
இருநூறு கவிதைகள் தாண்டியும்!!!
நன்றிகளை உரித்தாக்குகிறேன்
எழுத்துக்கு...இடமளித்ததற்கு!!!
எங்கோ எப்போதோ அழிந்திருக்கவேண்டிய
கவிஞர்களை...உயிர்ப்பித்தது இந்த "எழுத்து"
எழுதுங்கள் நண்பர்களே...இடமிருக்கிறது.
எழுத்தில்...எம் இதயத்திலும்...என்கிறது அது!
பரிசுக்காகவோ, பாராட்டிற்காகவோ அல்லாது, எழுதுவோம்...நம் தமிழை பராமரிப்பதற்கு!
உடைந்த பேனாமுட்களை ஓட்டவைக்கவேண்டாம்
அடைவோம் பேரின்பம், கணினித் தமிழ்மூலம்...
ஊடகம் மாறினாலும், உலகம் மாறினாலும்
கணினி புகுந்தாலும், தமிழ் - கன்னித் தமிழே!
எழுது எழுது! கணினி கற்கட்டும்
நம் தமிழை...வாழ்க "எழுத்து"